இலங்கைக்கு கடன் வழங்க ரஷ்யா இணக்கம்!!
21 Oct,2022
எரிபொருள் பிரச்சினைக்குரிய தீர்வாக ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணையினை இறக்குமதி செய்வது தொடர்பா ரஷ்ய அதிகாரிகளுக்கும் இலங்கை பிரதிநிதிகளுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதன்படி ரஷ்யாவுக்கான முன்னால் தூதுவர் சமன் வீரசிங்க குறிப்பிடுகையில் கச்சா எண்ணையினை இறக்குமதி செய்வதற்கான வர்த்த ரீதியான கடன்களை வழங்குவதற்கு ரஷ்யா தமது இனக்கத்தினை தெரிவித்துள்ளது என குறிப்பிட்டார்.
இதற்கமைய, தேவையான கடனின் அளவு மற்றும் மிக குறுகிய காலத்தினுல் கடன் மீள செலுத்தப்படும் எனவும் உறுதியளித்து இலங்கை ஜனாதிபதியினால் கடிதம் ஒன்று ரஷ்ய ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்று அனுப்ப வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.