யாழ் பலாலி விமான நிலையம் ஆரம்பம்!
20 Oct,2022
யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தில் விமான சேவைகளை இம் மாத இறுதி முதல் ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக விமான சேவைகள் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். ஆவர் மேலும் குறிப்பிடுகையில், இவ் விமான நிலையத்தினை இந்திய நிதி உதவியின் கீழ் மேலும் அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, அவர் தொடர்ந்தும் பதிலளிக்கையில் இந்த விமான நிலையத்தில் சர்வதேச சேவைகளை முன்னெடுக்கவுள்ளோம் அத்துடன் இந்திய அரசாங்கத்தினால் இந்த விமான நிலையத்தினை மேலும் அபிவிருத்தி செய்ய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அதனைப் பயன்படுத்தி பெரிய விமானங்கள் வரக்கூடிய வகையில் ஓடு பாதையினை அபிவிருத்தி செய்யவுள்ளதாக அவர் தெரிவித்தார்.