சீனா இலங்கையின் நெருங்கிய நண்பன், இந்தியா எங்களின் சகோதரன்!
20 Sep,2022
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு சகோதரர்களிற்கு இடையிலான உறவை போன்றது என தெரிவிப்பார் என இந்தியாவிற்கான இலங்கை தூதுவர் மிலிந்த மொராகொட தெரிவித்துள்ளார்.
சீனா இலங்கையின் நெருங்கிய நண்பன் ஆனால் இந்தியா எங்களின் சகோதரன் சகோதரி போன்றது என மகிந்த ராஜபக்ச தெரிவிப்பார் என இந்தியாவிற்கான தூதுவர் தெரிவித்துள்ளார்.
சீனா இலங்கையின் மிகமிக நெருங்கிய நண்பன் ஆனால் இந்தியா எங்கள் சகோதரன் சகோதரி என முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச எப்போதும் தெரிவிப்பார் குடும்பத்திற்குள் மோதல்கள் கருத்துவேறுபாடுகள் எழக்கூடும் ஆனாலும் இறுதியில் அது உங்கள் குடும்பம் என அவர் தெரிவிப்பார் எனவும் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார்.
இந்திய பெண் செய்தியாளர்களுடனான சந்திப்பின்போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இருநாடுகளிற்கும் இடையிலான வரலாற்று உறவுகள் குறித்து கருத்து வெளியிட்டுள்ள மிலிந்த மொரகொட இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவுகளில் முக்கிய பங்கை வகித்த சீதை மற்றும் சங்கமித்த குறித்தும் கருத்து தெரிவித்துள்ளார்.
எங்களின் உறவுகள் மிகவும் விசேடமானவை எழுச்சிகள் வீழ்ச்சிகள் காணப்படும் எங்கள் உறவு நிச்சயமாக சமச்சீரற்றது ஆனால் விசேடமானது என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை பொருளாதார நெருக்கடியில் சி;க்கியுள்ள வேளை இந்தியா வழங்கிய உதவிகள் குறித்து விபரித்துள்ள மிலிந்த மொராகொட இந்த உதவிக்காக தான் நன்றியுடன் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா எங்களிற்கு நிதி உதவி மாத்திரம் செய்யவில்லை எங்களிற்காக சர்வதேச நாணயநிதியம் மற்றும் ஏனைய அபிவிருத்தி சகாக்களுடன் பேசியுள்ளது அவர்கள் எங்களிற்கு ஆதரவளிக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பாதுகாப்பு நலன்களிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் நோக்கமில்லை இந்தியாவின் பாதுகாப்பு நலன்கள் எங்களுடைய நலன்கள் ஜனாதிபதி சமீபத்தில் இதனை தெளிவாக குறிப்பிட்டுள்ளார் இதனை எவ்வாறு நடைமுறைப்படுத்கின்றோம் என்பதே முக்கியம் எனவும் மிலிந்த மொராகொட தெரிவித்துள்ளார்.
நாட்டில் பரந்துபட்ட ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுக்கொண்டிருந்ததன் காரணமாகவும் கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டு ஓடிய சூழ்நிலையிலும் கப்பல் குறித்து அவசரஅவசரமாக முடிவெடுக்கப்பட்டது என மிலிந்தமொராகொட தெரிவித்துள்ளார்.