நாமல் ராஜபக்சவுக்கு வழங்கப்பட்ட உயர் பதவி..!
15 Sep,2022
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்கா பயணமானார்.
இந்நிலையில், அவர் வெளிநாடு சென்றிருக்கும் நிலையில் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பதவிக்கு நாமல் ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நியமனம் தொடர்பில் பொதுஜன பெரமுன உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிடாவிட்டாலும், நாமல் ராஜபக்ச தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்ட சந்தர்ப்பத்திலிருந்து நாடு எதிர்நோக்கும் நெருக்கடிகள் குறித்து அண்மைய நாட்களில் அதிகளவான கருத்துக்களை வெளியிட ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, அதிபர் ரணில் விக்ரமசிங்க வெளிநாடு விஜயம் முடித்து நாடு திரும்பிய பின்னர் தற்போது உள்ள அமைச்சரவையில் புதிய உறுப்பினர்கள் இணைக்கப்படவுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
அத்துடன், குறித்த உறுப்பினர்களின் பெயர் பட்டியலில் நாமல் ராஜபக்சவின் பெயரும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது