தாய்லாந்திலிருந்து இலங்கை திரும்பிய பெண் கட்டுநாயக்காவில் கைது
01 Sep,2022
தாய்லாந்திலிருந்து இலங்கை திரும்பிய பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 62 இலட்சத்து 25 ஆயிரம் ரூபா பெறுமதியான 06 தங்க பிஸ்கட்டுகளுடன் இவர் கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தங்க பிஸ்கட்டுகள்
தாய்லாந்தில் இருந்து இலங்கைக்கு வந்த சந்தேகநபர், கொழும்பு கொட்டிகாவத்தை பிரதேசத்தில் வசிக்கும் 52 வயதான வர்த்தகரான பெண் என தெரியவந்துள்ளது.
மேலும் இவர் மீது நடத்தப்பட்ட விசாரணையில் தங்க பிஸ்கட்டுகளை நசுக்கி கொண்டு வந்தது தெரியவந்தது.