வெளிநாடுகளுக்கு செல்லும் இலங்கை பணியாளர்களுக்கு முக்கிய தகவல்!
18 Aug,2022
வெளிநாடுகளுக்கு செல்லும் இலங்கை பணியாளர்கள் விமான நிலையத்திற்குள் நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் விசேட நுழைவாயில் திறக்கப்படவுள்ளது.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 1ஆம் திகதி இந்த விசேட நுழைவாயில் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளுக்கு செல்லும் இலங்கை பணியாளர்கள் எதிர்நோக்கும் சிரமங்களை தவிர்ப்பதே இதன் நோக்கம் என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
மேலும், இதன் மூலம் சுற்றுலா விசா மூலம் வெளிநாடுகளுக்கு தொழில் நிமித்தம் செல்பவர்களை அடையாளம் காண முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.