இலங்கையில் இந்து மதக்கோவில்களுக்கு பெருமளவில் செல்லும் சிங்களவர்கள்!
06 Aug,2022
இலங்கையின் முன்னேஸ்வரம் கோவில்.இலங்கையின் முன்னேஸ்வரம் கோவில்.
இலங்கையின் மிகப் பழமையான கோவிலாக முன்னேஸ்வரம் கோயில் அறியப்படுகிறது.
இலங்கையில் சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் வரலாறு தோறும் இருந்த பிரிவினை எல்லோரும் அறிந்த ஒன்றே. கடந்த சில மாதங்களாக அங்கு அரசுக்கு எதிராக நடக்கும் போராட்டங்கள் இன, மொழி, மத பேதமின்றி இலங்கை மக்களை ஒன்றிணைத்துள்ளது.
தங்கள் பௌத்த மத நம்பிக்கையில் மிக ஈடுபாட்டுடன் இருக்கும் சிங்களவர்கள் இலங்கையில் உள்ள இந்து மத சிவாலயங்களையும் வழிபடுகிறார்கள் என்று தெரியவந்துள்ளது. அப்படி இலங்கையில் வடமேற்கு மாகாணத்தின் புத்தளம் மாவட்டத்தில் உள்ள முன்னேஸ்வரம் சிவன் கோயிலுக்குப் பெருமளவில் சிங்களவர்கள் வழிபாடு நடத்த வருகை தருகிறார்கள்.
அவர்கள் தமிழக கோயில்களில் படைக்கப்படுவதை விட அதிக அளவில் பழங்களை காணிக்கையாகப் படைத்து கடவுளை அங்கு வழிபாடு நடத்துகிறார்கள்.