மஹிந்தவே மொட்டு தலைவர்!ராஜபக்சவினரை விரட்டிய தமிழர்களின் சாபம்!
02 Aug,2022
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவே ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
மொட்டுக் கட்சிக்குள் இருந்துக்கொண்டு சுயாதீனமாக இயங்கி வரும் சதிகாரர்களை கட்சியிலிருந்து நீக்குவோம் எனவும் அவர் அறிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீண்டும் நாட்டுக்கு வந்து அரசியலில் ஈடுபட எதிர்பார்த்ததால் அவரை வரவேற்பதாகவும், சாகர காரியவசம் கூறியுள்ளார்.
ராஜபக்சவினரை விரட்டிய தமிழர்களின் சாபம்!
தமிழர்களின் சாபமே இன்று சிங்களவர்களின் கோபமாக மாறியுள்ளது. இலங்கையின் அடையாளமாக, ராஜமுத்திரையாக பார்க்கப்பட்ட ராஜபக்ஸக்கள் தமிழர்களின் சாபம் காரணமாக இலங்கையின் அசிங்கமான சின்னமாக மாற்றப்பட்டுள்ளார்கள் என தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு, செங்கலடியில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
அண்மையில் பயங்கரவாத தடைச்சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டிருந்தது. அதன்மூலமும் தற்போது தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு விமோசனம் கிடைத்ததாக தெரியவில்லை. பயங்கரவாத தடைச்சட்டம் இலங்கையில் முற்றாக நீக்கப்படவேண்டும். ஏராளமான தமிழ் கைதிகள் இன்னும் சிறையில் வாடிக்கொண்டிருக்கின்றார்கள்.
புதிய அரசாங்கத்தினை அமைத்துள்ள ரணில் விக்ரமசிங்கவிடம் தமிழ் உணர்வாளர் அமைப்பு பயங்கரவாத தடைச்சட்ட உடனடியாக நீக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைக்கின்றது.
பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்கவேண்டும் என்ற கோரிக்கையுடன் நாடளாவிய ரீதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பினால் கையெழுத்துப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதன் பின்னர் என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது. இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்குவதற்காக தமிழ் மக்களில் நலன்கொண்ட அனைத்து அரசியல்வாதிகளும் இணைந்து குரல்கொடுக்கவேண்டும். தமிழ் மக்களுக்கு ஒரு அரசியல் தெளிவூட்டல் அவசியமாகயிருக்கின்றது. அரசியல் தெளிவின்மை காரணமாகத்தான் சமூகத்திற்கு தேவையற்றவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவுசெய்யப்படும் நிலை காணப்படுகின்றது.
கிராமம் கிராமமாக சென்று வாக்கு பலத்தினால் மக்கள் எதனை சாதிக்கமுடியும் என்பதை தெளிவுபடுத்தவேண்டிய தேவையுள்ளது. அந்த தெளிவூட்டல் செயற்பாடுகளை அடுத்தகட்டமாக முன்னெடுக்கவுள்ளோம்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாட்டில் எங்களுக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும் இன்று தமிழ் சமூகத்தின் முன்னிலை கட்சியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு காணப்படுகின்றது. எந்த நாடுகள் தமிழ் மக்களின் நலன் தொடர்பில் பேசுவதற்கான அமைப்பாக அது காணப்படுகின்றது. தமிழர்களின் உரிமைசார்ந்த விடயங்களில் அவர்கள் பின்வாங்கக்கூடாது என்பதே எமது நிலைப்பாடாகும். வடகிழக்கு இணைப்பு என்ற விடயத்தில் எந்தவித விட்டுக்கொடுப்புக்கும் இடமிருக்ககூடாது. வடகிழக்கு இணைந்து கிழக்கு மாகாணம் தனித்துவமாகயிருக்கவேண்டும் என்பதையே நாங்கள் விரும்புகின்றோம்