இலங்கை 'மாஜி' அதிபர் கோத்தபய ராஜபக்சே நாடு திரும்ப திட்டம்
27 Jul,2022
இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே, சிங்கப்பூரிலிருந்து விரைவில் நாடு திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நம் அண்டை நாடான இலங்கை விலைவாசி உயர்வு, எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட பல பிரச்னைகளில் சிக்கித் தவிக்கிறது. இதையடுத்து, அந்நாட்டு மக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர். இது, 9ம் தேதி தீவிரமடைந்தது.
போராட்டக்காரர்கள், அப்போதைய அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் மாளிகைக்குள் புகுந்து பொருட்களை சூறையாடினர். கோத்தபய குடும்பத்துடன் மாலத் தீவிற்கு தப்பி, அங்கிருந்து சிங்கப்பூருக்குச் சென்றார். இதற்கிடையே, அதிபராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்று உள்ளார். பிரதமர் தினேஷ் குணவர்த்தனே தலைமையில் புதிய அரசு அமைந்து உள்ளது.
இந்நிலையில், இலங்கை போக்குவரத்து அமைச்சர் பந்துலா குணவர்த்தனே கூறுகையில் ''கோத்தபய ராஜபக்சே தலைமறைவாக உள்ளதாக கூறப்படுவதை நான் நம்பவில்லை. அவர், விரைவில் நாடு திரும்ப வாய்ப்பு உள்ளது,'' என்றார்.