அதிகாலை 5 மணி வரை நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல் பதில் ஜனாதிபதி ரணில்
14 Jul,2022
நாடளாவிய ரீதியில் நாளை(14) அதிகாலை 5 மணி வரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிவிசேட வர்த்தமானி ஒன்றினை வெளியிட்டு இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் கையொப்பத்துடன் குறித்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
இன்று(புதன்கிழமை) முதல் அமுலுக்கும் வரும் வகையில் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி ஜனாதிபதியின் கடமைகள் மற்றும் பொறுப்புக்கள் ரணில் விக்கிரமசிங்கவிற்கு உத்தியோகப்பூர்வமாக வழங்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்திற்கு அருகில் துப்பாக்கி பிரயோகம்!
நாடாளுமன்றத்திற்கு அருகில் தற்போது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்தினை போராட்டக்காரர்கள் முற்றுகையிட முயற்சித்த நிலையிலேயே இவ்வறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.