ஆர்ப்பாட்டகாரர்களை வம்புக்கு இழுக்கும் ரணில் ; மஹிந்தவுக்கு வந்த நிலைமை தான் ரணிலுக்கும்
07 Jul,2022
அரசியல் சீர்திருத்தங்களுக்கு இளம் ஆர்ப்பாட்டகாரர்களின் கருத்துக்களைப் பெறுவதற்கு அவர்களும் மிகவும் வௌிப்படையான நிலை இருக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அல் ஜசீரா இணையத்தளத்திற்கு வழங்கிய நேர்காணலில் பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதாரத்தை ஒரு குறிப்பிட்ட ஸ்திரத்தன்மைக்கு கொண்டு வர இன்னும் ஒன்றரை வருடங்கள் ஆகும் என பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நாடு செல்லும் போக்கை பார்த்தால் கூடிய விரைவில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு நேர்ந்தகதி தான் ரணிலுக்கும் நடக்கும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.