மனைவி வெளிநாடு செல்வதைத் தடுக்குமாறு கணவன் முறைப்பாடு
05 Jul,2022
பொருளாதார நெருக்கடி என தெரிவித்து, 35 வயதான தனது மனைவியை நபர் ஒருவர் வெளிநாடு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அதைனைத் தடுக்குமாறு தெரிவித்து இரத்தினபுரி பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இரத்தினபுரி- துரெக்கந்த பிரதேசத்தைச் சேர்ந்த சுப்ரமணியம் ரவீந்திரன் என்ற நபரே இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
தனக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர் என்றும் முறையே 11, 6,3,2 ஆகிய வயதுகளையுடைய குழந்தைகளுள் ஒரு குழுந்தை விசேட தேவையுடைய பெண் பிள்ளை என்றும் தெரிவித்துள்ளார்.
தானும் மனைவியம் தேயிலைத் தோட்டமொன்றில் தொழில் செய்து வரும் நிலையில், தனது மனைவியை நபர் ஒருவர் வெளிநாட்டுக்கு அனுப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் தற்போது அதன நிமித்தம் வீட்டிலிருந்து சென்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
எனவே தாயைத் தேடி பிள்ளைகள் அழுவதால் மனைவியை வெளிநாடு செல்வதைத் தடுக்குமாறு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.