அதிக பணவீக்கம் பதிவாகிய நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு இரண்டாவது இடம் !
27 Jun,2022
அமெரிக்காவின் ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான ஸ்டீவ் ஹான்கி, அதிக பணவீக்கம் பதிவாகிய நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளார்.
பேராசிரியர் ஸ்டீவ் ஹான்கேயின் மதிப்பீட்டின்படி, உலகில் வருடமொன்றுக்கு அதிக பணவீக்கம் விகிதம் பதிவாகிய நாடுகளில் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளது.
அறிக்கையின்படி, சிம்பாப்வே முதலிடத்தில் இருக்கும் அதேவேளை, துருக்கி இலங்கைக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்திலும் லெபனான் 4 ஆவது இடத்திலும் உள்ளது.