இலவசமருந்து சேவையை ஆரம்பித்த சிறிலங்கன் எயார்லைன்ஸ்
24 Jun,2022
சிறிலங்கன் எயார்லைன்ஸ் இலவச சேவை
பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள இலங்கைக்கு சர்வதேச நாடுகளின் நன்கொடையாளர்களால் வழங்கப்படும் அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை, இலவசமாக இலங்கைக்கு இறக்குமதி செய்யும் பணியை சிறிலங்கன் எயார்லைன்ஸ் ஆரம்பித்துள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பெருளாதார நெருக்கடி நிலை அனைத்து தொழில் நடவடிக்கைகளையும் பாதிப்படையச் செய்துள்ளது.
இதனால் பொதுமக்கள் நாளுக்கு நாள் செல்லனாத் துன்பங்களை அனுபவித்து வரும் நிலையில், சர்வதேச நாடுகளின் நன்கொடையாளர்கள் உதவிகளை வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் சிறிலங்கன் எயார்லைன்ஸ் இலவச சேவை ஒன்றை ஆரம்பித்துள்ளது.
உலகெங்கிலும் உள்ள நன்கொடையாளர்களால் வழங்கப்படும் அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை, இலங்கையில் உள்ள வைத்தியசாலைகளுக்கு இலவசமாக கொண்டுவந்து சேர்க்கும் பணியை சிறிலங்கன் எயார்லைன்ஸ் ஆரம்பித்துள்ளது.
சிறிலங்கன் எயார்லைன்ஸின் சமூக பொறுப்புணர்வுப் பிரிவான சிறிங்கன் கேர்ஸ் மூலமாக இந்தப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
அதற்கமைய, பிரான்ஸ், இந்தோனேசியா, பிரித்தானியா, மலேசியா, குவைத் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் உள்ள நன்கொடையாளர்களால் வழங்கப்படும் அவசரகால மருத்துவப் பொருட்களை தொடர்ச்சியாக இலங்கைக்கு கொண்டுவந்து சேர்ப்பதற்கு சிறிலங்கன் எயார்லைன்ஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதேவேளை, தமிழக அரசினால் வழங்கப்பட்ட மனிதாபிமான உதவிகளுடனான மற்றுமொரு கப்பல் இலங்கைக்கு நேற்றைய தினம் அனுப்பி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.