பிறந்த நாளில் ஆவது பதவியை ராஜினாமா செய் என்று மக்கள் கூச்சலிட்டு ஆர்பாட்டம் !
21 Jun,2022
கோட்டபாய ராஜபக்ஷ ஜூன் 20ம் திகதி, 1949ம் ஆண்டு பிறந்தார். அவருக்கு 73 வயதாகிறது. இன்று வரை எந்த ஒரு பொறுப்புக் கூறலும் இன்றி தொடர்ந்து ஆட்சி செய்து வருகிறார், இன் நிலையில் கோட்ட கோ கம நகரில் இருந்து பல நூறு மக்கள் திரண்டு, கோட்டபாய வீட்டுக்குச் சென்று, இன்று உனது பிறந்த நாளிலாவது ஒரு நல்ல காரியத்தை செய். தயவு செய்து பதவியை விட்டு விலகிப் போ என்று கூச்சலிட்டுள்ளார்கள். உள்ளே ஒரு துண்டு கேக்கைக் கூட வெட்ட அவர்கள் விட வில்லை. காரணம் செக்கியுரட்டி. சில வேளை கம்பி எகிறிக் குதித்து மக்கள் உள்ளே வரக் கூடும் என்ற பதற்றம் நிலவியதால். ராணுவம் அங்கே குவிக்கப்பட்டது. கோட்டாவின் வீட்டுக்கு செல்லும் 2 வாசல்களையும் தற்போது போராட்டக் காரர்கள் முடக்கியுள்ளதாக அறியப்படுகிறது. இன்று வரை அவர்கள் விலக வில்லை. இந்த கலவரத்தில் எங்கே கேக் வெட்டுவது ?