இலங்கை தற்போது எதிர்கொள்வது மனிதனால் உருவாக்கப்பட்ட நெருக்கடி என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்திய ஊடகமொன்றிற்கான பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இலங்கை தற்போது மிகமோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது சுதந்திரம் கிடைத்த பின்னர் இலங்கை சந்தித்துள்ள மோசமான பொருளாதார நெருக்கடியிது முன்னைய ஆட்சியாளர்களினதும் அரசாங்கத்தினதும் தவறே இதற்கு காரணம் என ரணில் விக்கிரமசிங்க நம்புகின்றார்.இன் முகாமைத்துவ ஆசிரியர் பல்கி சர்மாவிற்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது மனிதனால் உருவாக்கப்பட்ட நெருக்கடி என இலங்கை நெருக்கடியை விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலைக்கு தீர்வை காண்பதற்கு இலங்கையின் அரசியல்வாதிகள் ஒன்றிணைந்து ஒழுங்கமைப்பை மாற்ற முன்வரவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இது மனிதன் உருவாக்கிய நெருக்கடி, அரசியல்வாதிகள் தான் காரணம் என அவர்கள் தெரிவிக்கின்றனர்,நிச்சயமாக முன்னர் ஆட்சியிலிருந்தவர்களே காரணம் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திலிருந்த அனேகமானவர்கள் இதனை முன்னெடுத்தார்கள் என நான் கருதுகின்றேன்,முன்னைய அரசாங்கம் மாத்திரமல்ல அரசியல்வாதிகளும் காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமைப்புமுறையில் ஏற்பட்ட வீழ்ச்சிக்கு நாங்கள் அனைவரும் ஏதோ வழியில் காரணம் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும்,நாங்கள் அதனை மாற்றவேண்டும் என இலங்கை பிரதமர் இந்திய ஊடகத்திற்கு தெரிவித்;துள்ளார்.
இது எங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்குமான சவால் நீங்கள் இதனை மாற்ற விரும்புகின்றீர்களா இல்லையா என்ற விடயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சிலர் மாற்ற விரும்புகின்றனர் சிலர் மாற்றவிரும்பவில்லை,ஆகவே இலங்கையின் அரசியல் இதனை மாற்றி புதிதாக மாற விரும்புகின்றவர்கள் மாற்ற விரும்பாதவர்களால் தீர்மானி;க்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் பொருளாதாரத்தைமறுசீரமைப்பதற்கான திட்டங்கள் குறித்தும் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.இலங்கை நிதிவழங்கும் அமைப்புகள் தனியார் முதலீட்டாளர்களிடமிருந்து கடன்களை பெற தயாராகவுள்ளது என தெரிவித்துள்ள ரணில் விக்கிரமசிங்க இந்தியா சீனாவுடன் இலங்கை நிலவரம் குறித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.
மறுசீரமைப்பி;ற்கான கடன்களை நிதிவழங்கும் அமைப்புகள் மற்றும் தனியார் முதலீட்டளார்களிடமிருந்து பெறவேண்டும்,நிதிவழங்கும் சமூகத்தை பொறுத்தவரை அவர்கள் அவைரும் எங்கள் மறுசீரமைப்பு திட்டத்தினை ஏற்றுக்கொள்ளவேண்டும்,பாரிஸ் கழகத்தில் ஜப்பான் மாத்திரம், இந்தியா சீனா போன்றவை அதற்கு வெளியே உள்ளன,எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இணக்கப்பாடு ஒன்று எங்களிற்குஅவசியம் இது குறித்து நாங்கள் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவேண்டும்,நான் இது குறித்து சீனாவுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவில்லை பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வேன்,இதுவரை பதில் இல்லை சீன தூதுவரும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளார்.