பசில் ராஜபக்சே ராஜினாமா: அரசியலில் இருந்தும் விலகலா?
11 Jun,2022
மேலும் அவர் அரசியலில் இருந்து விலக போவதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக பிரதமர் மஹிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தார். இதனை அடுத்து நிதி அமைச்சர் பசில் ராஜபக்சேவும் ராஜினாமா செய்தார்
இந்த நிலையில் பசில் ராஜபக்சே தனது நாடாளுமன்ற எம்பி பதவியிலிருந்தும் ராஜினாமா செய்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
அமைச்சர் மற்றும் எம்பி பதவியில் இருந்து விலகிய பசில் ராஜபக்சே அரசியலில் இருந்தும் விலகுவார் என்று கூறப்பட்ட நிலையில் அவரது ஆதரவாளர்கள் பசில் ராஜபக்சே தொடர்ந்து அரசியலில் ஈடுபடுவார் என்று தெரிவித்தனர்