எரிபொருள் மற்றும் நிலக்கரி வாங்குவதற்கு எந்த நாடும் எங்களுக்கு உதவவில்லை இந்தியா மட்டுமே எங்களுக்கு உதவுகிறது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தால்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
எந்த நாடும் எங்களுக்கு உதவ முன்வரவில்லை! இந்தியாவிடம் செல்லுமாறு என்னை கேட்க வேண்டாம் - எச்சரித்தார் ரணில்
இது தொடர்பில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “மின்சார சபையின் ஊழியர்களை பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டால் உதவிக்காக இந்தியாவிடம் செல்லும்படி என்னைக் கேட்க வேண்டாம்.
எரிபொருள் மற்றும் நிலக்கரி வாங்குவதற்கு எந்த நாடும் எங்களுக்கு உதவவில்லை. எரிபொருள் மற்றும் நிலக்கரி வாங்குவதற்கு இந்தியா மட்டுமே எங்களுக்கு உதவுகிறது.
தற்போது இந்திய கடன் வரம்பு மீறப்பட்டுள்ளது. விரைவில் இந்த வசதியை நீட்டிக்க அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். எங்களுக்கு எரிபொருள் மற்றும் மின்சாரம் தேவை.
நான் உங்களை எச்சரிக்கிறேன். நீங்கள் ஒரு இருட்டடிப்புக்கு சென்றால், இலங்கைக்கு எரிபொருளை பெற்றுக்கொள்ள இந்தியா உதவுமென என்னால் உறுதியளிக்க முடியாது.
நீங்கள் தெருக்களில் இறங்கி போராடலாம். ஆனால், மின்வெட்டுக்கு செல்ல வேண்டாம்", எனக் குறிப்பிட்டார்.
முன்னதாக இன்று நள்ளிரவு முதல் நாடளாவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ள நிலையில் பிரதமர் இவ்வாறு காட்டமாக உரையாற்றியுள்ளார்.
மின்சார சபையின் கோரிக்கைகள்
இதேவேளை, எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவிடம் பின்வரும் மூன்று முக்கிய கோரிக்கைகளை இலங்கை மின்சார சபை முன்வைத்திருந்தது.
எந்த நாடும் எங்களுக்கு உதவ முன்வரவில்லை! இந்தியாவிடம் செல்லுமாறு என்னை கேட்க வேண்டாம் - எச்சரித்தார் ரணில்
1. போட்டி ஏல முறையைப் பின்பற்றாமல், உள்ளூர் ஏலதாரர்களுக்கு எந்த சமமான வாய்ப்பையும் வழங்காமல், நாட்டின் காற்று மற்றும் சூரிய வளங்களை அதானி குழுமத்திடம் ஒப்படைத்தல்.
2. 2009 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க மின்சாரச் சட்டத்தைத் திருத்துதல், கோரப்படாத முன்மொழிவுகள் மூலம் ஊழலுக்கு வழி வகுக்கும் போட்டி ஏல முறையை ரத்து செய்தல்.
3. கடந்த ஆட்சியின் போது நியமிக்கப்பட்ட CEBயின் தலைவரை நீக்காமல் இருப்பது.
இருப்பினும் இந்த கோரிக்கைகள் தொடர்பில் அமைச்சர் கஞ்சன விஜேசேகரவுடன் இன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளதையடுத்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக மின்சார சபை தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.
இதேவேளை, இன்று நள்ளிரவில் தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்படும். இதனால் நாளை காலை 08 மணி முதல் மின்சார விநியோகம் தடைப்படும் என இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.