இலங்கை விவசாயத்திற்கு உதவும் இந்தியா! – 65 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியா வழங்கல்!
03 Jun,2022
இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில் விவசாயத்திற்கு உதவ யூரியா வழங்க இந்தியா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையில் அன்னிய செலவாணி குறைந்ததால் இறக்குமதி பாதிக்கப்பட்டது. அதை தொடர்ந்து எழுந்த பொருளாதார நெருக்கடியால் எரிப்பொருள் மற்றும் அன்றாட பொருட்களுக்கே மக்கள் அல்லாடும் நிலை ஏற்பட்டது. இதனால் மக்கள் புரட்சி வெடித்து போராட்டத்தில் இறங்கினர்.
இதனால் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே பதவியை ராஜினாமா செய்து தலைமறைவானார். பின்னர் எதிர்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கே பிரதமராக தற்போது பொறுப்பேற்று நிலைமையை கட்டுப்படுத்த முயன்று வருகிறார்.
இந்நிலையில் இலங்கையில் விவசாய பணிகள் முடங்காமல் இருக்க யூரியா உரம் வழங்க இலங்கை இந்தியாவிற்கு கோரிக்கை விடுத்துள்ளது. அதை ஏற்று இந்தியா 65 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியாவை இலங்கைக்கு அளிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதை இந்தியாவில் உள்ள இலங்கை உயர் ஆணையம் தெரிவித்துள்ளது.