இலங்கையில் தொடரும் நெருக்கடி; வரிகளை உயர்த்த முடிவு!வாட் வரி 12% ஆக உயர்வு
01 Jun,2022
இலங்கையில் வாட் வரி 12% ஆக உயர்வு
இலங்கையில் பொருளாதார நெருக்கடி நீடிக்கும் நிலையில் வாட் வரி 8% இல் இருந்து 12% ஆக உயர்ந்துள்ளது. கொழும்பு. கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் இலங்கையில் வாட் வரி, வருமான வரி உள்ளிட்டவை உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இலங்கையின் வருவாயை அதிகரிக்க முடியும் என அந்நாட்டு அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. புதிய பிரதமராக பதவியேற்ற ரணில் விக்ரமசிங்கே, பொருளாதார நெருக்கடி பிரச்சினைகளுக்கு தீர்வு காண பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்தநிலையில் இலங்கையில் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க வரி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, இலங்கையில் பொருளாதார நெருக்கடி நீடிக்கும் நிலையில் வாட் வரி 8% இல் இருந்து 12% ஆக உயர்ந்துள்ளது. வாட், பந்தயம், கேமிங் போன்ற வரிகளை உயர்த்த இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்த நிலையில் வாட் வரி அதிகரித்துள்ளது.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் வரிகளை உயர்த்த அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
இலங்கையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக அன்னிய செலவாணி கையிறுப்பு குறைந்த நிலையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. ஏற்றுமதி, இறக்குமதி கடுமையாக பாதித்ததால் மக்கள் அன்றாட அத்தியாவசிய பொருட்களே கிடைக்காமல் திண்டாடும் நிலை ஏற்பட்டது.
இதனால் மக்கள் போராட்டம் வெடித்த நிலையில் பதவியை ராஜினாமா செய்த மகிந்த ராஜபக்சே தலைமறைவானார். அதை தொடர்ந்து பிரதமராக பொறுப்பேற்ற ரணில் விக்ரமசிங்கெ பொருளாதார நெருக்கடியை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் தற்போது இலங்கையில் வரிகளை உயர்த்த அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் இலங்கையில் தொலைதொடர்பு, ஆன்லைன் விளையாட்டுகள், பந்தய ஆட்டங்களுக்கான வரிகள் மற்றும் மதிப்பு கூட்டு வரிகள் உயர்த்தப்படலாம் என கூறப்படுகிறது.