இலங்கையின் பொருளாதார நெருக்கடியை தீர்க்க தயாராகும் பிரித்தானியா!
31 May,2022
பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கிடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
பிரதமரின் உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடலின் போது, இலங்கையின் தற்போயை நிலைமை குறித்து போரிஸ் ஜோன்சனுக்கு விளக்கமளித்ததாக பிரதமர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இலங்கையில் காலநிலை மாற்றம் தொடர்பாகவும் இலங்கையை ஒரு ஏற்றுமதி முக்கியத்துவம் மிக்க நாடாக மாற்றுவதற்கும் பிரித்தானியா உதவி அளிக்கும் என பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் உறுதியளித்ததாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.