13 ஆவது திருத்த சட்டம் நாட்டுக்கு பேராபத்து -நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க மகாநாயக்கர்கள்
30 May,2022
நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச தலைவர் முறைமையை நீக்கும் பிரேரணைக்கு தாம் உடன்படவில்லை என மகா சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
நீதியமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ச அஸ்கிரிய பீடாதிபதி அதி வணக்கத்திற்குரிய வரகாகொட ஸ்ரீ ஞானராத தேரரை இன்று நேரில் சந்தித்து புதிய அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் விளக்கமளிக்கும் போதே மகா சங்கத்தினர் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
13ம் திருத்தச் சட்டம் ஆபத்தானது
இலங்கையில் முப்படைகளின் பிரதானியாக அரச தலைவர் தொடர்ந்திருக்க வேண்டும். ஏனெனில் 13ம் திருத்தச் சட்டம் இந்நாட்டுக்கு மிகவும் ஆபத்தானது. அதைத் தடுப்பதற்கு அரச தலைவருக்கு அதிகாரம் இருந்தால் மாத்திரமே சாத்தியப்படும்.
சுயாதீன ஆணைக்குழுக்கள் சுதந்திரமாக செயற்பட வேண்டும். அதற்காக அரச தலைவரின் அதிகாரங்களை குறைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.
அதே போன்று தற்போதைக்கு பொருளாதாரப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதே முக்கியமானது. அதற்குப் பதிலாக அரசியலமைப்புத் திருத்தம் போன்றவற்றுக்கு முன்னுரிமை அளித்தால் பொருளாதார நெருக்கடி மீண்டும் அதிகரித்து விடும் என்றும் மகாநாயக்கர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.