மாணவர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டுத் தாக்குதல்!
20 May,2022
ஜனாதிபதி கோட்டாபயவை பதவி விலக கோரி அனைத்து பல்கலைக்கழக மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் மீது பொலிசாரால் கண்ணீர் புகைக்குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
கொழும்பில் தாமரைத்தடாகம் முன்பாக பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்ட பேரணியை ஆரம்பித்தனர். குறித்த பேரணியானது பொல்துவ சந்தியிலுள்ள நாடாளுமன்ற நுழைவுப் பகுதிக்கு வரலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. அத்துடன் அங்கு வீதித் தடைகளும் பெருமளவு குவிக்கப்பட்டுள்ளதுடன், தண்ணீர் தாரை பிரயோக வண்டிகளும் தயார்படுத்தப்பட்டிருந்தன.