பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் மீது துரத்தி துரத்தி தாக்குதல்!
11 May,2022
மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கொழும்பு-02 கங்காராம பகுதியில் மக்கள் முன்னெடுத்துக் கொண்டிருக்கும் போராட்ட ஸ்தலத்துக்கு விரைந்த சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீதே, பொதுமக்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். பேர வாவிக்கு அருகில் ஒரு குழுவினரால் குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, தேசபந்து தென்னகோனின் வாகனமும் கும்பலால் தாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதனையடுத்து அங்கிருந்த மக்களை கலைப்பதற்காக, வானத்தை நோக்கி பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
அங்கு பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது.
காலிமுகத்திடலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது, பெரமுனவின் அரசியல்வாதிக்கு ஆதரவளித்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.