இலங்கை சென்ற வெளிநாட்டு பயணிகளின் பரிதாப நிலை!
24 Apr,2022
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் அங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் கடும் நெருக்கடி நிலையை எதிர்கொண்டுள்ளனர்.
இன்றைய தினம் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில் வீதிகள் அனைத்தும் வீதி தடங்கல் மூலம் மறைக்கப்பட்டது.
இதனால் கொழும்பிற்கு சென்றிருந்த சுற்றுலா பயணிகள் வீதிகளில் பயணிக்க முடியாமல் தவித்த புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
பொலிஸ் கடவைகளுக்குள் புகுந்து செல்ல வேண்டிய நிலைமை சுற்றுலா பயணிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனே இலங்கையின் நெருக்கடியான பொருளாதாரத்தில் பாதிக்கப்பட் சுற்றுலா பயணிகள் நாட்டை விட்டு சென்றுள்ளனர்.
அந்நிய செலாவணியை எதிர்பார்த்திருக்கும் இலங்கைக்கு சுற்றுலா பயணிகளின் வீழ்ச்சி மேலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இவ்வாறான செயற்பாடுகள் காரணமாக இனிமேல் சுற்றுலா பயணிகள் இலங்கை வருவது சந்தேகம் என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.