இலங்கையில் இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தும் பொலிஸ்
06 Apr,2022
இலங்கையில் அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டம் மற்றுமொரு வடிவத்தை நோக்கி நகர்வதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மக்களின் போராட்டத்திற்கு பொலிஸாரின் ஆதரவு கிடைத்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஆயுதம் தாங்கிய இராணுவத்தினரை கொண்டு அடக்க அரசாங்கம் முயற்சித்து வருகிறது.
இதன் காரணமாக பொலிஸாருக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் மோதல் நிலை ஏற்பட்டுள்ளது.
நேற்றையதினம் நாடாளுமன்றத்திற்கு அருகில் மக்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தின் போது இராணுவத்தின் சிறப்பு அதிரடி படையணி ஒன்று திடீரென நுழைத்தமையினால் பரபரப்பு ஏற்பட்டது.
இதன்போது பொலிஸாரினால் அந்த படையணி அடித்து விரட்டப்பட்டது. இலக்க தகடுகள் அல்லாத மோட்டர் சைக்கிள்களில் முகத்தை மறைத்து வந்த படையணியின் இருவர் மீது பொலிஸார் அதிகாரிகள் தாக்குதல் நடத்தியமையால் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது.
இதனை கடும் கண்டனம் வெளியிட்டுள்ள இராணுவ தளபதி சவேந்திர சில்வா, குறித்த பொலிஸார் அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என எச்சரித்துள்ளார்.