படையினர்கள் எப்போதும் அரசியலமைப்பிற்கு உட்பட்டே செயற்படுவார்கள்”
05 Apr,2022
ஆயுதப்படையினர்கள் எப்போதும் அரசியலமைப்பிற்கு உட்பட்டு செயற்படுவார்கள் என பாதுகாப்பு படைகளின் பிரதானியும் இராணுவ தளபதியான் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
இலங்கையில் உள்ள வெளிநாட்டு உயர்ஸ்தானிகராலயங்கள் மற்றும் தூதரகங்களின் பாதுகாப்பு ஆலோசகர்கள் மற்றும் இணைப்பாளர்களை, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இராணுவத் தளபதி நேற்று சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது, ஜெனரல் சில்வா, நாட்டின் தற்போதைய நிலவரங்கள் குறித்து வெளிநாட்டு தூதரக அதிகாரிகளுக்கு விளக்கமளித்ததாக கூறப்படுகிறது.
மேலும் நாட்டின் பாதுகாப்பிற்காக ஆயுதப்படை எப்போதும் செயற்படுவதாக இராணுவத் தளபதி பாதுகாப்பு ஆலோசகர்களிடம் தெரிவித்தார்.
இந்த கலந்துரையாடலில் அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, அவுஸ்ரேலியா, ஜப்பான், சீனா, இந்தியா, ஈரான், பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளின் தூதரகங்களின் பாதுகாப்பு ஆலோசகர்கள் கலந்து கொண்டனர்.