இலங்கையில் முதன்முறையாக புகையிரத ஆசனங்களைமுன்பதிவுஅறிமுகமாகும் சேவை!
24 Mar,2022
இலங்கையில் முதன்முறையாக புகையிரத ஆசனங்களை ஒன்லைன் மூலம் முன்பதிவு செய்வதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அதற்கமைய, இணையத்தளம் மற்றும் கையடக்கத் தொலைபேசி செயலி (App) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஆசனத்தை ஒதுக்கிக் கொள்ளக் கூடிய பயணம் மற்றும் புகையிரத வகுப்பு ஆகியவற்றை தெரிவு செய்து ஒரு சில படிமுறைகள் மூலம் ஆசனங்களை முற்பதிவு செய்து கொள்ள முடியும்.
இதற்கான கட்டணங்களை Visa, master மற்றும் Lanka QR உள்ளிட்ட பல்வேறு கொடுப்பனவு முறைகளின் மூலம் மேற்கொள்ளலாம்.
அத்துடன் m-Ticketing (365) சேவை கொண்ட நிலையங்களுக்கு வந்து பயணச்சீட்டிலுள்ள இலக்கத்துடன் தேசிய அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டை சமர்ப்பித்து குறித்த முன்பதிவு செய்யப்பட்ட நுழைவுச்சீட்டை பெற முடியும்.
இதற்கு சேவை கட்டணமாக 5% மேலதிகமாக செலுத்த வேண்டும். உதாரணத்துக்கு வெள்ளவத்தையிலிருந்து காங்கேசன்துறைக் குளிரூட்டப்பட்ட புகையிரத கட்டணம் 1700 ரூபா என்றால் 85 ரூபா மேலதிகமாக செலுத்த வேண்டும்.
இதில் ஒரே ஒரு குறைபாடு நாங்கள் நினைச்ச ஆசனத்தை பதிவுசெய்ய முடியாது (Seats cannot be selected according to preference. Your seat will automatically be allocated according to the availability)
https://seatreservation.railway.gov.lk/mtktwebslr/