அமெரிக்கா செல்ல முற்பட்ட இலங்கைப் பெண் அதிரடியாக கைது!
22 Mar,2022
கட்டுநாயக்க விமான நிலையத்தில், போலியான கடவுச்சீட்டை பயன்படுத்தி வெளிநாடு செல்ல முற்பட்ட பெண் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
போலியான கடவுச்சீட்டை பயன்படுத்தி அமெரிக்கா செல்ல முற்பட்ட பெண் ஒருவரே இவ்வாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கட்டுநாயக்க பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான பெண் 64 வயதுடைய பத்தரமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். மேலு கைதான நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீர பிணைகளில் விடுதலை செய்யப்பட்டதாகவும்க் கூறப்படுகின்றது.