விமானக் கட்டணங்கள் 27 வீதம் அதிகரிப்பு!
12 Mar,2022
விமான பயணச் சீட்டுகளுக்கான கட்டணங்கள் 27% இனால் அதிகரிக்கப்படவுள்ளதாக சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாச தெரிவித்தார். இன்றுநள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் இந்த கட்டண அதிகாிப்பு நடைமுறைக்கு வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் விநியோகிக்கப்படும் அனைத்து வகையான விமான பயணச் சீட்டுகளுக்கான கட்டணங்களும் அதிகரிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.