பைசர் ஏற்றிய மாணவிகள் ஐவருக்கு மயக்கம்
04 Feb,2022
பொகவந்தலாவை பொது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்துக்கு உட்பட்ட, சென்மேரீஸ் மத்திய கல்லூரியில் பைசர் தடுப்பூசி ஏற்றிகொண்ட ஜந்து மாணவிகள் மயக்கம் அடைந்த நிலையில், பொகவந்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று காலை (2) இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சென்மேரீஸ் மத்திய கல்லூரி மற்றும் ஹொலி ரோசரி மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்றுவருகின்ற 12 வயது தொடக்கம் 16வயது வரையான மாணவர்களுக்கு இன்று காலை முதல் பைசர் தடுப்பூசி ஏற்றப்பட்டது.
இதன் போது 2000 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி ஏற்றப்பட்டதுடன், இதன் போதே ஐந்து மாணவிகள் மயக்கமுற்ற நிலையில் வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.