இலங்கையில் கோர விபத்து - ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் பலி
02 Feb,2022
காலி, ரத்கம பகுதியில் ரயிலுடன் மோதி முச்சக்கர வண்டி விபத்திற்குள்ளானதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி, அவரின் மனைவி, மனைவியின் தாய் மற்றும் தந்தை ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
ரயில் கடவையை கடக்க முயன்ற போது, வேகமாக வந்த ரயிலில் முச்சக்கர வண்டி மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
இதன்போது முச்சக்கர வண்டியில் பயணித்தவர்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும், சிகிச்சைப் பலனின்றி உயரிழந்துள்ளனர்.
விபத்து தொடர்பில் ரத்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.