கட்டுநாயக்க விமான நிலையத்தில் 5 புதிய சோதனை சாவடிகள் திறப்பு!
08 Jan,2022
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாட்டு பயணிகளுக்காக ஐந்து புதிய சோதனை சாவடிகள் (check-in counters) இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலுள்ள சோதனைக் கவுண்டர்களின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் போக்குவரத்து அதிகரித்துள்ளதால், வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை விமானப் போக்குவரத்து அதிகார சபையின் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.