இலங்கைக்கான விமான சேவை குவைத் எயார்வேஸ் திடீரென நிறுத்தம்
02 Jan,2022
குவைத் எயார்வேஸ் விமான சேவை நிறுவனம் இலங்கைக்கான தனது சேவைகளை திடீரென நிறுத்தியுள்ளதாக தெரியவருகிறது.
போதிய பயணிகள் இல்லாமை மற்றும் அதிகமான செலவு காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இலங்கை வரும் சுற்றுலாப பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
இந்த நிலைமையானது, இலங்கையின் சுற்றுலாத்துறைக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என தெரிவிக்கப்படுகிறது.