விபச்சாரத்திற்காக இலங்கை கொண்டு வரப்படும் உஸ்பெகிஸ்தான் பெண்கள் என்ன தான் நடக்கிறது ?
31 Dec,2021
இலங்கை அரசிடம் தான் அமெரிக்க டாலர்கள் கையிருப்பில் இல்லை. ஆனால் ஏனைய பிரைவேட் நபர்களிடம் அது தாராளமாக பிளங்குகிறது. ஹோட்டல்களில் அல்லது குழந்தைப் பராமரிப்புப் பணியாளர்களாக வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்து, விபச்சாரத்திற்காக உஸ்பெகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படும் பெண்கள் குறித்து ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. மிகவும் சக்த்திவாய்ந்த விபச்சார விடுதிகள் அவை. அதனை வைத்திருப்பவர்களோடு , பொலிசார் மோத முடியாது. அவ்வாறு உஸ்பெகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட்ட பல பெண்களுக்கு கடந்த சில மாதங்களாக உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கையில் மனித கடத்தலை தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் அந்த ஊடகத்திற்கு தெரிவித்துள்ளனர்.
பெயர் தெரியாத நிலையில், வெளிநாட்டவர்கள் சுற்றுலாப் பயணிகளாகவோ அல்லது வேலை விசா மூலமாகவோ இலங்கைக்கு கடத்தப்படும் பெண்கள் விபச்சாரத்திற்கு தள்ளப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சில பாதிக்கப்பட்டவர்கள் இலங்கையில் தீர்ப்பு வழங்கப்படும் வரை 2௩ ஆண்டுகள் தங்கியிருக்க வேண்டும் என்பதால், விசாரணைகளுக்கு ஒத்துழைக்க மறுக்கிறார்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.தப்பித்து ஆதரவைத் தேடும் பெண்கள் பெரும்பாலும் தங்குமிடம் அல்லது பாதுகாப்பான வீடுகளில் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சக்திவாய்ந்த ஆதரவுடன் இயங்கும் சில விபச்சார விடுதிகளுடன் உள்நாட்டு கடத்தல் தொடர்கிறது என்றும் அதிகாரிகள் தெரிவித்ததாக ஆங்கில ஊடகத்தின் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.