இலங்கைக்கு 12 நாட்களில் வருகை தந்த 24 ஆயிரம் பேர்
14 Dec,2021
கடந்த 12 நாட்களில் 24,773 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க(Prasanna Ranatunga) தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் டிசம்பர் 12 ஆம் திகதி நாடு திறக்கப்பட்டதில் இருந்து 129,762 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர்.
இந்தியா, ரஷ்யா, இங்கிலாந்து, ஜேர்மனி, அவுஸ்ரேலியா, கஜகஸ்தான், அமெரிக்கா, பிரான்ஸ், கனடா மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர்.
ஐரோப்பிய நாடுகளில் தற்போதைய குளிர்காலத்தை இலக்காகக் கொண்டு சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் சிறப்பு ஊக்குவிப்பு திட்டங்களையும் செயல்படுத்துகிறது. அந்த நாடுகளில் இருந்து பல விமான நிறுவனங்கள் இலங்கைக்கு நேரடி விமான சேவையை ஆரம்பித்துள்ளன.
மேலும், இலங்கையின் பயணக் கட்டுப்பாடுகள் புதுப்பிக்கப்பட்டமையும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பதற்கு வழிவகுத்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.