கொலை செய்யப்பட்ட இலங்கையர்! குடுப்பத்திற்கு 2.5 மில்லியன் ரூபா நன்கொடை
09 Dec,2021
பாகிஸ்தானில் படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் குடுப்பத்திற்கு மனிதநேய அடிப்படையில் 2.5 மில்லியன் ரூபா வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ள அவரது மனைவி மற்றும் பிள்ளைகளின் நலன் கருதி இந்த தொகையை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியக ஊழியர் நலனோம்புகை நிதியத்தின் மூலமாக இந்த தொகையை வழங்க தொழில் அமைச்சர் சமர்பித்த யோசனைக்கு இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.