வெளிநாட்டில் இருந்து இலங்கை வருபவர்களுக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு.
01 Dec,2021
கடந்த 14 நாட்கள் வருகை தந்த வெளிநாட்டவர்களுக்கு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என இராஜாங்க அமைச்சர் சுதர்ச்சினி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
புதிய கொரோனா வைரஸ் பிறழ்வான ஒமிக்ரான் இதுவரை 17 நாடுகளில் பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கிருந்து வருபவர்களுக்கு இந்த பரிசோதனை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இந்த வைரஸ் பிறழ்வானது ஏற்கனவே தொற்றுக்குள்ளானோருக்கும் தொற்றக்கூடும் என்பதோடு இந்த வைரஸ் பிறழ்வு தொடர்பில் தொடர்ந்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதால் நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டவர்களுக்கான அனுமதி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.