இலங்கையில் வெடிகுண்டாக மாறும் காஸ் சிலிண்டர்கள் - பின்னணி குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல்
30 Nov,2021
சமையல் எரிவாயு கொள்கலன்களில் செறிமானங்கள் மாற்றப்பட்டுள்ளமை கனியவள கூட்டுதாபனத்தின் இரசாயன பகுப்பாய்வு அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார இதனைத் தெரிவித்தார்.
பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட எரிவாயு கொள்கலன்களில் பியூட்டேன் மற்றும் ப்ரோப்பேன் என்பன 51:49 என்ற விகிதத்தில் அடங்கியுள்ளமை உறுதியாகியுள்ளது. இது ஒரு பாரதூரமான பிரச்சினை எனவும் அந்த அறிக்கையை விரைவில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்குமாறும் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனை நிராகரித்த வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில, நுகர்வோர் அதிகார சபையின் கோரிக்கைக்கு அமைய குறித்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக குறிப்பிட்டார். அத்துடன் அதனை வெளியிடுவதற்கான அதிகாரம் தமக்கில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
இலங்கையில் இதுவரை 20 இற்கும் மேற்பட்ட காஸ் சிலிண்டர்கள் வெடிப்பு சம்பவங்கள் பதிவாகி உள்ளமை குறி்பிடத்தக்கது.