பணம் அச்சிட்டதன் எதிரொலி - 04 ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள
23 Nov,2021
தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் (NCPI) மூலம் அளவிடப்படும் நாடு தழுவிய பணவீக்கம் கடந்த செப்ரெம்பர் மாதத்தில் 6.2 வீதமாக இருந்து ஒக்டோபர் மாதத்தில் 8.3 வீதமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
4 ஆண்டுகளுக்குப் பின்னர் நாட்டில் பதிவான அதிகபட்ச பணவீக்கமாக இது கருதப்படுகிறது.
குறைந்த வட்டி விகிதங்களை பேணுவதற்காக பணத்தை அச்சடித்ததன் பின்னர் நான்கு வருட உயர்வானது பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னர் 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பணவீக்கம் 8.4 சதவீதமாக இருந்தது.
ஒக்டோபர் மாதத்தில் அதிகரித்த பணவீக்கம் காரணமாக உணவு மற்றும் உணவு அல்லாத பொருட்களின் மாதாந்த பணவீக்கம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது.
உணவுப் பணவீக்கம் 10 சதவீதத்தில் இருந்து 11.7 சதவீதமாகவும், உணவு அல்லாத பணவீக்கம் 3 சதவீதத்திலிருந்து 5.4 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது. எவ்வாறாயினும், தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு மாறாமல் இருந்த ஆண்டு சராசரி அடிப்படை பணவீக்கம் செப்ரெம்பர் 2021 இல் 4.4 சதவீதத்திலிருந்து 2021 ஒக்டோபரில் 4.6 சதவீதமாக அதிகரித்துள்ளது.