சிறிலங்கன் விமான சேவை எதிர்கொள்ள போகும் பாரிய பிரச்சினை ! - ஹர்ச டி சில்வா
16 Nov,2021
அந்நிய செலாவணி பிரச்சினையை தீர்ப்பது தொடர்பில் அரசதலைவர் கோட்டாபய ராஜபக்ச தீவிர கவனத்தை செலுத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா (Harsha De Silva) தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் பிரச்சினை காரணமாக ஸ்ரீலங்கன் விமான சேவையின் A320/321 விமானங்களுக்கு குறுந்தூர பயணங்களுக்காக எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியாத சிக்கலை எதிர்நோக்க நேரிடும்.
குறுந்தூர பயணங்களுக்காக எரிபொருளை கொழும்பில் நிரப்பிக்கொள்ள வேண்டும் என்பதே இதற்கு காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பெரிய கதைகளை கூறும் அஜித் நிவாட் கப்ராலின் (Ajith Nivat Cabral) திட்டங்கள் தொடர்ந்தும் தோல்வியடைந்து வருகின்றன என ஹர்ச டி சில்வா தனது டுவிட்டரில் கூறியுள்ளார்.