சீரற்ற காலநிலையால் இதுவரை 23 பேர் பலி
10 Nov,2021
நாட்டில் தொடர்ந்து பெய்துவரும் கன மழையினால் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களில் சிக்குண்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 23ஆக அதிகரித்துள்ளது.
இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று (10) வெளியிட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதுளை மாவட்டத்தில் 4 உயிரிழப்புக்களும், கேகாலை மாவட்டத்தில் 13 உயிரிழப்புக்களும், குருநாகல் மாவட்டத்தில் 2 உயிரிழப்புக்களும், மாத்தளை, முல்லைத்தீவு, புத்தளம் ஆகிய மாவட்டங்களில் தலா ஒவ்வொரு உயிரிழப்புக்களும் பதிவாகியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்தோடு 5 பேர் காயமடைந்துள்ளதுடன், ஒருவர் காணாமல் போயுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.