சுற்றுலா பயணிகளை ஏற்றிச்சென்றவேளை ஏற்பட்ட அனர்த்தம் - இருவர் ஸ்தலத்தில் பலி
07 Nov,2021
சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற சஃபாரி வாகனமொன்று விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
ஹபரண – ஹருலு சூழலியல் பூங்காவில் இன்று பிற்பகல் இந்த அனர்த்தம் இடம்பெற்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
விபத்தில் காயமடைந்த 9 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஹபரண காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்