கோட்டாபய , மைத்திரியை படுகொலை செய்யசதி -வெளியான பரபரப்பு தகவல்
05 Nov,2021
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச(Gotabaya Rajapaksa) மற்றும் முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன(Maithripala Sirisena) ஆகியோரை படுகொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் அரசாங்கம் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டுமென ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார(Palitha Range Bandara) தெரிவித்துள்ளார்.
முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன மற்றும் தற்போதைய அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச ஆகியோரைக் கொல்ல சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர அண்மையில் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
சதிச் செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இருவருமே அன்றும் இன்றும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச தலைவர்களாக இருப்பதால் விசாரணைகளுக்கு எந்தத் தடையும் இல்லை என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இவ்வாறான சதி இருப்பதாக பல வருடங்களுக்கு முன்னர் நாமல் குமார கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.