சீனாவின் இராணுவத் தளமாக மாறப்போகும் இலங்கை -அம்பலப்படுத்திய அறிக்கை
05 Nov,2021
சீன குடியரசின் இராணுவத் தளங்களாக அல்லது வசதி வழங்கும் நிலையங்களாக இலங்கை உள்ளிட்ட சில நாடுகள் மாற்றப்படலாமென அமெரிக்கா புதிய தகவலொன்றை வெளியிட்டுள்ளது.
பென்டகன் விடுத்துள்ள புதிய பாதுகாப்பு ஆய்வறிக்கையில் இந்த விடயம் வெளிச்சத்திற்கு தெரியவந்துள்ளது.
சீன இராணுவ மற்றும் பாதுகாப்பு அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் இந்த அறிக்கையை தயாரித்துள்ளது.
சீனா தமது இராணுவ பலத்தை பரந்த பிரதேசத்தில் பேணும் நோக்கில், இலங்கை உள்ளிட்ட 13 நாடுகளில் தமது இராணுவத்திற்கு வசதி வழங்கும் நிலையங்களை ஸ்தாபிப்பதற்கு இடமுள்ளதாக இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கை, கம்போடியா, மியன்மார், தாய்லாந்து, சிங்கப்பூர், இந்தோனேஷியா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட 13 நாடுகளை சீனா இதற்காக பயன்படுத்துவதற்கு இடமுள்ளதாக பென்டகன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனா தமது இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையை வலுப்படுத்துவதற்கு இதன் மூலம் எதிர்பார்ப்பதாகவும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.