அரச தலைவர் எடுத்துள்ள முக்கிய தீர்மானங்கள்
29 Oct,2021
-
தற்போது நடைமுறையில் உள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகளை ஒக்டோபர் 31ஆம் திகதி அதிகாலை 4மணிக்குப் பின்னர் நீக்குவதற்கு கொவிட் செயலணி தீர்மானித்துள்ளது.
புதிய பொதுமைப்படுத்தலின் கீழ் மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) தெரிவித்துள்ளார்.
இன்று காலை காணொளி தொழில்நுட்பம் ஊடாக கொவிட் தடுப்புக் குழுவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது மேற்கொள்ள முடிவுகள் வருமாறு,
* நடைமுறையில் இருந்த மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து கட்டுப்பாடு ஒக்டோபர் 31ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்படுகின்றது.
* மக்கள் பொது இடங்களுக்குள் செல்லும் போது தடுப்பூசி அட்டையை வைத்திருத்தல் கட்டாயம்
* பாடசாலை மட்டத்தில் க.பொ.த உயர்தரம் மற்றும் சாதாரணதர வகுப்புகளை ஆரம்பிப்பதற்கு முடிவு.
* தற்போதை நிலைமையை நிர்வகிப்பதற்கு மாகாண சுகாதார பணிப்பாளர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்படும்.
* சுற்றுலாத்துறை கைத்தொழிலை இழக்குவைத்து பல தீர்மானங்கள் எடுத்தல்.
* மக்களிடம் தடுப்பூசி பயத்தை ஏற்படுத்தும் குழுக்கள் தொடர்பில் ஆராயுமாறு காவல்துறை மா அதிபருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.