ஒரே நாடு ஒரே சட்டத்தை உருவாக்க ஞானசார தேரர் தலைமையில் செயலணி!
27 Oct,2021
ஒரே நாடு -ஒரே சட்டம் என்பதை செயற்படுத்தும் சட்ட வரைபை தயாரிக்க 13 பேரை உள்ளடக்கிய விசேட ஜனாதிபதி செயலணி உருவாக்கப்பட்டுள்ளது. 'ஒரே நாடு-ஒரே சட்டம்'ஜனாதிபதி செயலணியின் தலைவராக பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கடகொட அத்தே ஞானசார தேரர் நியமிக்கப்பட்டுள்ளார்.
பேராசிரியர் தயானந்த பண்டார, பேராசிரியர் சாந்திநந்தன விஜயபண்டார,பேராசிரியர் சுமேத சிறிவர்தன, என்.ஜி.வ சுஜீவ பண்டிதரத்ன, மற்றும் சட்டத்தரணி இரேஷ் செனெவிரத்ன, சட்டத்தரணி சஞ்சய மாரம்பே, எரந்த நவரத்ன, பாணி வேவல, மௌலவி மொஹமட்(காலி உலமா சபை), விரிவுரையாளர் மொஹொமட் இந்திகாப், கலீல் ரஹுமான், அஸீஸ் நிசார்தீன் ஆகியோர் செயலணியில் ஏனைய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.செயலணியில்தமிழ் உறுப்பினர்கள்எவரும் உள்ளடங்கப்படாமை கவனிக்கத்தக்கது.
செயலணியின் செயற்பாடுகளுக்கு அனைத்து அரச உத்தியோகத்தர்களும்ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என பணிக்கப்பட்டுள்ளதுடன், பணிகளை நிறைவேற்றுவதற்குத் தேவையானவாறு விடயங்களை விசாரிப்பதற்கும், ஆலோசனை வழங்குவதற்கும்செயலணிக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
செயலணியின் உறுப்பினர்கள் மாதத்திற்கொரு முறை ஜனாதிபதிக்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்கும், முழுமையான, இறுதி அறிக்கையை 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும் என ஜனாதிபதி செயலணிக்கு பணிப்புரை விடுத்துள்ளார்