மகிந்தவின் கோட்டையிலும் கொடும்பாவி! போராட்டங்களால் அதிரும் சிறிலங்கா
24 Oct,2021
ஹம்பாந்தோட்டை - லுணுகம்வெஹரவில் நடைபெற்ற “கொவி ஹதகெஸ்ம” நிகழ்ச்சி மற்றும் விவசாயிகளின் ஆர்ப்பாட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச (Sajith Preamadasa) கலந்துகொண்டார்.
அங்கு சென்ற அவர், அப்பகுதி விவசாயிகளைச் சந்தித்து அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து நீண்ட நேரம் கலந்துரையாடினார்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், விவசாய அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேயின் (Mahindananda Aluthgamage) உருவப் பொம்மையினை வீதியில் இழுந்துச் சென்ற தீயிட்டுக் கொழுத்தியுள்ளனர்.