கரன்னகொடவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை தொடர முடியாது – நீதிமன்றில் சட்டமா அதிபர்
13 Oct,2021
முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொடவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை தொடர முடியாது என சட்டமா அதிபர் திணைக்களம் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் போனதாக கூறப்படும் வழக்கில், கரன்னாகொட மற்றும் 13 பேருக்கு எதிராக முன்னாள் சட்டமா அதிபர் அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்.
இன்று (புதன்கிழமை), மேன்முறையீட்டு நீதிமன்றில் நீதிபதி சோபித ராஜகருணா மற்றும் தம்மிகா கனேபொல முன்னிலையில் வசந்த கரன்னகொட தாக்கல் செய்த விண்ணப்பம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டது.
2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணமால் ஆக்கப்பட்ட சம்பவத்தில் 14 வது சந்தேகநபராக வசந்த கரன்னகொட பெயரிப்பட்டார்.
கடந்த ஓகஸ்ட் 4 ஆம் ஆம் திகதி, வசந்த கரன்னகொடவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை தொடர முடியாது என கொழும்பு மேல் நீதிமன்றின் விசேட ட்ரயல் அட்பார் நீதிமன்றுக்கு சட்டமா அதிபர் திணைக்களம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.