ஜனாதிபதி ஏன் இராணுவத் தளபதியை மிகவும் நேசிக்கின்றார்?" அஜந்த பெரேரா
12 Oct,2021
சிறிலங்கா அரச அதிபர் கோட்டாபய ராஜபக்ஸ(Gotabaya Rajapaksha), இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவுக்கு (Shavendra Silva) முதல் உரிமை அளிப்பது குறித்து பேராசிரியர் அஜந்த பெரேரா (Ajanda Perera) ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டுள்ளார்.
“எங்கள் ஜனாதிபதி இராணுவத் தளபதியை மிகவும் நேசிக்கிறார்.
20 ஆவது திருத்தச் சட்டத்தை கொண்டுவந்து, இந்த நாட்டில் தன் வார்த்தையை சட்டமாக்கும் பயணத்தில், ஜனாதிபதி தம்மை பாதுகாப்பதற்காகவே இராணுவத்தளபதியை மிகவும் நேசிக்கின்றமைக்கு காரணமாக அமைகின்றது.
இப்போது நான் ஒரு விடயத்தை நம்புகிறேன். என்னவென்றால்,
இந்த ஜனாதிபதியைப் பற்றி மக்கள் விரக்தியடையும் நாளில், முதல் நாற்காலியில் அமர இராணுவத் தளபதி முயற்சிப்பார். இது எனக்கு தெரியும். " என்று குறிப்பிட்டுள்ளார்.